• முகப்பு
  • கள்ளச்சந்தையில் அரசு விலை இல்லா மிதிவண்டி டிவிசி மேல்நிலைப்பள்ளியில் அட்டூழியம்.

கள்ளச்சந்தையில் அரசு விலை இல்லா மிதிவண்டி டிவிசி மேல்நிலைப்பள்ளியில் அட்டூழியம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அரசு உதவி பெறும் பள்ளியான டி வி சி மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக விலையில்லா அரசு மிதிவண்டி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை யினருக்கு புகார் வந்த நிலையில், முதல்கட்டமாக 26 மிதிவண்டியை பறிமுதல் செய்தனர். புகாரின் அடிப்படையில் பத்தாண்டு காலமாக மாணவர்களுக்கு எத்தனை மிதிவண்டி வழங்கப்பட்டிருக்கிறது , மேலும் அரசை ஏமாற்றி பொய் கணக்கு காண்பித்து அரசிடமிருந்து 250 மிதிவண்டியை பெற்றுக்கொண்டு, 150 மாணவர்களுக்கு மட்டும் மிதிவண்டியை வழங்கிவிட்டு, மீதமுள்ள மிதிவண்டிகளை கள்ள சந்தையில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்றது தெரியவந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 10 ஆண்டுகளாக அரசிடமிருந்து பெறப்பட்ட மிதிவண்டி மாணவ மாணவிகளுக்கு எத்தனை வழங்கப்பட்டது என்பன குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம். இன்றைய செய்திகள் ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,srimushnam news,crime news,newstoday,Today breaking news

VIDEOS

RELATED NEWS

Recommended