• முகப்பு
  • india
  • டெபிட்கார்டு இல்லாமல் ஏ.டி.எம் ல் பணம் எடுக்கும் வசதி !

டெபிட்கார்டு இல்லாமல் ஏ.டி.எம் ல் பணம் எடுக்கும் வசதி !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பணப்பரிவர்த்தனையில் தொழில் நுட்பவளர்ச்சி அபரிமிதமாக காணப்படும் இந்த நவ நாகரிக யுகத்தில் பல்வேறு நவீன மாற்றங்கள் வந்து விட்டன. வங்கிக்கு சென்றுபணம் எடுத்தக்காலம் போய் தெருவுக்குத்தெரு ஏ.டி.எம்மெஷின்கள் உருவாகின. தற்போது யு.பி.ஐ.செயலிகள் மூலமாக ஸ்மார்ட் போன்கள் கொண்டு எளிதில் பணம் பரி வர்த்தனை செய்யமுடியும். ஏ.டி.எம்.களில் வருகைக்குப்பின்னர் வங்கிகளில் பணம் எடுக்கும் கூட்டம் குறைந்தது. இதனை இன்னும் எளிதாக ஏ.டி.எம் .கார்டு பயன் படுத்தாமல் ஏ.டி.எம்.மெஷின்களில் உள்ள கோட் ஐ ஸ்கேன்செய்து பணத்தை எடுக்கும் வசதி வெளி நாடுகளில் அறிமுகம் ஆகியது. இந்தவசதி தற்போது ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளதையடுத்து பணப் பரிவர்த்தனை இன்னும் சுலபமாகி உள்ளது. முதற் கட்டமாக சில வங்கிகளுக்கு மட்டுமே கார்டில்லாமல் பணத்தை ஏ.டி.எம்.மெஷின்களிலிருந்து எடுக்கும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளதாகவும், இது வெற்றிபெற்றால் அடுத் தடுத்து அனைத்துவங்கி ஏ.டி.எம் களிலும் யு.பி.ஐ. மூலமாக பணமெடுக்கும் வசதி அறிமுகப் படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் இதற்காக பிரத்யேகமாக செயலியொன்று அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இந்த செயலிக்குள் சென்று ஏ.டி.எம். மெஷினில் உள்ள கோட் ஐ ஸ்கேன்செய்து எடுக்கவேண்டிய பணம்குறித்த தகவல்களை அளித்தால் டெபிட்கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அபரிமிதமான வர வேற்பு இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். பெரு நகரங்களில் மட்டுமே தற்போது இந்தவசதி அறிமுகப் படுத்தப் பட்டுள்ள நிலையில் விரைவில் இந்தமுறை குக்கிராமங்கள்வரை கொண்டுசேர்க்கப்படும் எனக்கூறப்படுகிறது. பணத்தை எடுக்காமலேயே வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக ஸ்மார்ட்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்தால் உடனடியாக வங்கியிடம் புகாரளிக்க வேண்டும், உடனே பணம் மீண்டும் கணக்கில் சேர்க்கப் படும் என ஆர்.பி.ஐ தகவல் அளித்து உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended