• முகப்பு
  • pondichery
  • இரவு நேரத்தில், பூட்டி இருக்கும் வீடுகளை உடைத்து நகை-பணத்தை தொடர்ச்சியாக திருடும் மர்ம கும்பலின் சிசிடிவி காட்சி.

இரவு நேரத்தில், பூட்டி இருக்கும் வீடுகளை உடைத்து நகை-பணத்தை தொடர்ச்சியாக திருடும் மர்ம கும்பலின் சிசிடிவி காட்சி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இரவு நேரத்தில், பூட்டி இருக்கும் வீடுகளை உடைத்து நகை-பணத்தை மர்ம கும்பல் தொடர்ச்சியாக திருடி வருகிறது. இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் திருட்டு நடந்த வீட்டில், அமைக்கபட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அரை நிர்வாணமாக டவுசர் கொள்ளையர்கள் வீடுகளை உடைப்பது தெரியவந்தது. இது குறித்து புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திரா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த விஜய், சூர்யா, மணி ஆகியோர் என்பதும், டவுசர் கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வடக்கு பகுதி கிரைம் போலீசார், டவுசர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு தொடர்பாக 3 பெண்கள் உள்பட 6 கொள்ளை கும்பலை, ஈரோடு போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தனிப்படை போலீசார் ஈரோடு விரைந்து சென்று, கைதான கொள்ளை கும்பலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விஜய்-லட்சுமி, சூர்யா-பாரதி, மணி-மீனா ஜோடி என்பது, வாரங்கல் பகுதியை சேர்ந்த டவுசர் கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது. மேலும் பிரபல கொள்ளை கும்பலான இவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலாவுக்கு தம்பதி போல வந்து, பகல் நேரத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள். பின்பு திருடும் வீடுகளை உறுதி செய்த பிறகு, தங்களது ஜோடியை பேருந்து நிலையத்தில் தங்க வைப்பார்கள். இதையடுத்து ஆண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு டவுசருடன் சென்று, திருடி விட்டு பொருட்களுடன் பேருந்து நிலையம் திரும்பி, தங்களது ஜோடிகளை அழைத்து கொண்டு வெளியூர் சென்று விடுவார்கள். இதனால் அவர்கள் போலீசில் சிக்காமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இந்த கொள்ளை கும்பல், புதுச்சேரியில் 5 இடங்களில் கை வரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்யும் பணியில், புதுச்சேரி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended