• முகப்பு
  • political
  • நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில்

நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக கழகத்தின் பொதுக்குழு வருகின்ற 11 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவை நடத்த கூடாது என ஒபிஎஸ் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தை அணுகி உள்ள நிலையில், வருகின்ற 11 ம் தேதி சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்திரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கழகத்தினர் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் இபிஎஸ் என்ற முழக்கத்துடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குன்றத்தூர் ஒன்றிய கழக, குன்றத்தூர் நகராட்சி கழக மற்றும் மாங்காடு நகராட்சி கழக நிர்வாகிகள் என சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள இபிஎஸ் அவர்களை ஒருமனதாக ஆதரித்து சிறப்பான வரவேற்பு அளிப்பது பற்றி மகிழ்ச்சியுடன் விவாதித்தனர். இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய செயலாளருமான மதனந்த பங்கு பழனியவர்கள் பேசும்போது திமுகவை எதிர்க்கும் ஒரே வல்லமை பொருந்தியவர் இபிஎஸ் தான். அவர்கள் தலைமையில் தான் கட்சி எந்த பாகுபாடும் இல்லாமல் கட்சி மிகச் சிறப்பாக செயல்படும் என உறுதியுடன் பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கழகத்தினர் அனைவரும் மிக ஒற்றுமையாக செயல்பட்டு இபிஎஸ் தலைமையிலான ஒற்றை தலைமையை முழுமனதாக ஆதரித்து வரவேற்கின்றனர் என்றும் ஒன்றரை கோடி தொண்டர்களை காப்பாற்றும் சக்தி உள்ளவர் இபிஎஸ், அவரால்தான் திமுக கட்சியை பந்தாட முடியும் என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில் 100 ஆண்டு காலத்திற்க்குமேலும் கட்சியை நடத்தும் தகுதி உள்ளவர் என்றும் ஆணித்தரமாக பேசினார். கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசுகையில், கழகத்தையும் பல கோடி அதிமுக தொண்டர்களையும் மிக சாதூர்யமாக காப்பாற்ற சக்தி கொண்டவர் இபிஎஸ் என்றும் காஞ்சிபுரம் மாவட்டம் இபிஎஸ்ஸின் கோட்டையாக விளங்கும் என்றும் பேசினார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது என வாட்ஸ் அப்பில் வந்த நீதிமன்ற உத்தரவை கண்ட கழகத்தினர் மிகுந்த உற்சாகமடைந்தனர். அதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு கழகப் பெண்மணி ஒருவர் மிக ஆவேசமாக ஒற்றை தலைமை என்றால் அது இபிஎஸ் தலைமை தான் என கோஷமிட்டதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended