சீட்டு கம்பெனி பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு மண்டை உடைப்பு சாலை மறியல் செய்தியாளர்களை ஒருமையில் பேசிய உதவி ஆய்வாளர்
மாரிமுத்து
UPDATED: May 8, 2023, 9:29:46 AM
தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் சபரி தென்றல் என்ற பெயரில் சீட்டு கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த சீட்டு கம்பெனியில் தெற்கு காட்டன் ரோட்டை சேர்ந்த நமீதா என்ற பெண் சீட்டு போட்டுள்ளார், தொடர்ந்து ஆறு மாதங்கள் மாதம் பணம் செலுத்தியுள்ளார், ஆறாவது மாதம் சீட்டு பணம் 2 லட்சம் ரூபாய் சீட்டு போட்டதை எடுத்து பணம் கேட்டுள்ளார்.
சில நாட்களாக இது சீட்டு கம்பெனி நிறுவனத்திற்கும் நமீதாவுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது,
இந்த நிலையில் திங்கட்கிழமை கட்டிய பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு சீட்டு கம்பெனி நிறுவனம் கூறியதை அடுத்து நவீதாவின் கணவர் பியோ காலை 10 மணி அளவில் சீட்டு கம்பெனிக்கு சென்று பணம் கேட்டுள்ளார்,
அப்போது சீட்டு கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பியோவிற்கும் பணம் கேட்டதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து சீட்டு கம்பெனி ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார் பின்பு சீட்டு கம்பெனியில் இருந்தவர்கள் நவிதா கணவரை தாக்கியுள்ளனர் மண்டை உடைந்து காயத்துடன் அலுவலகத்தின் வெளியே இருந்துள்ளார்,
கணவரை காணவில்லை என்று நிவிதா அலுவலகத்தில் வெளியே தரையில் அமர்ந்து கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டார்.
அங்கு வந்த மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் சமரசம் செய்து நிச்சயமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
காயமடைந்த பியோவை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர், மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் பைனான்ஸ் கம்பெனியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் சீட்டு கம்பெனியை படம் பிடித்துக் கொண்டிருந்தபோது உள்ளே இருந்த மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் செய்தியாளர்களை பார்த்து தரக்குறைவாக பேசினார்.
அப்போது அங்கு இருந்த செய்தியாளர்களுக்கும் மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
செய்தியாளர்களை ஒருமையில் பேசிய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீட்டு கம்பெனி மோதல் தொடர்பாக சாலை மறியல் ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.