• முகப்பு
  • ஆன்மீகம்
  • பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா.

பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 23, 2023, 6:28:37 AM

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த அண்ணா நகரில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கதிர் பெருமாள் சுவாமி கோயில்.

ஆலயத்தில் ஸ்ரீ கதிர் பெருமாள் சுவாமி மற்றும் மகாலட்சுமி, பெண் தெய்வம் வீரமாஸ்தி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் ,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ஹயக் ஃபீவர் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயம் புணரமைத்து மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது.

இந்த ஆலயமானது தேவாங்கர்குல பிரம்மரிஷி ஸ்ரீ விஸ்வாமித்ர மஹரிஷி கோத்திரம் அம்புகுளார் குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.

5-5-23 அன்று காலை முகூர்த்தக்கால் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி முளைப்பாரி போடுதல் ,21ஆம் தேதி கிராம சாந்தியும், 23ஆம் தேதி காலை கணபதி ஹோமம் ,ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், நடைபெற்று அதனை தொடர்ந்து தொட்டம்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றிற்கு சென்று தீர்த்த குடம் எடுத்து 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்தனர்.

மாலை 4 மணியளவில் பாலக்காடு ஸ்ரீ பத்ர சிங்காரி மேளத்துடன் அண்ணாநகரில் உள்ள விநாயகர் கோயில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக ஆலையத்திற்கு வருதல், 24 ஆம் தேதி இரண்டாம் கால யாகவேள்வி,சூர்ய கும்ப பூஜை, துவார பூஜை நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து முக்கிய விழாவான கும்பாபிஷேக விழா 25ஆம் தேதி காலை 8.15மணி முதல் 9.15 மணிக்குள் மூலவர் ஸ்ரீ கதிர் பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் அபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த விழா ஆலயத்தின் நிர்வாக குழு தலைவர் எஸ் ஆர் பழனிச்சாமி மற்றும் ஆலய குழுவினர் சார்பில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended