• முகப்பு
  • குற்றம்
  • போலியான Instagram ID -ஐ உருவாக்கி பெண்ணை பற்றி தவறான செய்திகளை பரப்பியவர் கைது.

போலியான Instagram ID -ஐ உருவாக்கி பெண்ணை பற்றி தவறான செய்திகளை பரப்பியவர் கைது.

ராஜ்குமார்

UPDATED: Mar 30, 2023, 7:13:15 PM

தென்காசி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 2022 ஆம் வருடம் முதல் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போன் அழைப்புகள் வருவதாகவும், அதில் பேசும் நபர்கள் அவரிடம் ஆபாசமாக பேசியதாகவும், அவ்வாறு பேசிய ஒரு நபரின் மூலம் அவருடைய போன் நம்பர் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான அக்கவுண்ட் மூலமாக பலருக்கும் பகிரப்பட்டு உள்ளது என்று தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்  ஜோஸ்லின் அருள் செல்வி ,சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்)  செண்பக பிரியா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் போலியான இன்ஸ்டாகிராம் ID உருவாக்கி அப்பெண்ணைப் பற்றி தவறாக பதிவு பரப்பியவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (23) என்பவர் எனவும் அவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருவதாகவும் தகவல் கிடைத்த பட்சத்தில் சைபர் கிரைம் போலீசார் செங்கல்பட்டு சென்று அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended