• முகப்பு
  • மருத்துவம்
  • தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் சிகிச்சை அப்போலோ மருத்துவர்கள் சாதனை.

தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் சிகிச்சை அப்போலோ மருத்துவர்கள் சாதனை.

JK 

UPDATED: May 6, 2023, 10:43:08 AM

தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் வெற்றிகரமான சிகிச்சையை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் செந்தூரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :-

87வயது முதியவருக்கு வயிறு மற்றும் குடல் சார்ந்த உபாதைகள் ஏற்பட தொடங்கியது குறிப்பாக மலச்சிக்கல் மேலும் இவருக்கு நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொந்தரவுகள் இருந்த நிலையில் திருச்சி அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

தொடர் சிகிச்சையில் மருத்துவமனையில் இலியோகோலோனோஸ்கோப்பிக்கு உட்படுத்தப்பட்டார். இவரது பெருங்குடல் பகுதியில் பெரிய கட்டியை வெளிப்படுத்தியது.

இக்கட்டியானது புற்றுநோயா என ஆராய நரோவ் பாண்ட் இமேஜ் (NBI - Narrow Band Image) என்ற முறையில் பரிசோதனை செய்ததுடன் பயாப்ஸி என்ற திசு பரிசோதனை செய்து ஆராயப்பட்டது.

மேற்கண்ட பரிசோதனை முடிவுகள் இவருக்கு இருந்தது புற்றுநோய் கட்டி என கண்டறியப்பட்டது. எனவே இதனை அகற்றப்படவேண்டியது அவசியம்.

இதனை தொடர்ந்து வயிறு, குடல் மற்றும் என்டோஸ்கோப்பிக் சிறப்பு நிபுணர்  மருத்துவர் செந்தூரன் மற்றும் வெகுசிலரால் கையாளப்படும் சிகிச்சை முறைகளான POEM (பெர் ஒரல் எண்டோஸ்கோப்பிக் மயோடோமி), ESD (எண்டோஸ்கோப்பிக் ஷப்மியூகோஸல் டிஸ்ஸக்க்ஷன்) STER (ஷப்மியூகோஸல் ட்னலிங் எண்டோஸ்கோப்பிக் ரீசேக்ஷன்) போன்ற ஏனைய சிகிச்சை முறைகளை திறன்பட கையாளுவதுடன் ESD - எண்டோஸ்கோப்பிக் ஷப்மியூகோஸல் டிஸ்ஸக்க்ஷன் சிகிச்சையை ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி கொண்டு

இன்டராவேனோஸ் செடேஷன் எனப்படும் (IV Sedation) நரம்பு வழியாக மயக்கமருந்தை செலுத்தி தமிழகத்தில் முதல் முறையாக முதியவருக்கு பெருங்குடல் புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மறுநாளே இவரை நடைமுறை வாழ்க்கைக்கு செல்ல வழி செய்யப்பட்டது. 

பேட்டியின் போது மருத்துவர்கள் அழகப்பன், சரவணன், மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் சாமுவேல், நிர்வாக பொது மேலாளர் திரு சங்கீத், விற்பனை பிரிவு மூத்த மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended