Author: THE GREAT INDIA NEWS

Category: district

தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறுவது வழக்கம். 2017-ம் ஆண்டு 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 14-வது ஊதிய ஒப்பந்தம் 2020-ம் ஆண்டு ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. காஞ்சிபுரம் பேருந்து பணிமனை நுழைவாயிலில் அண்ணா தொழிற்சங்கம் பேரவை போக்குவரத்து பிரிவு மாநில செயலாளர் பழனி தலைமையில் தமிழக அரசையும் போக்குவரத்து கழகத்தையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை 12ஆம் தேதிக்குள் முடிக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ,காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், காஞ்சிபுரம் மண்டல தலைவர் வெங்கடபதி, செயலாளர் சங்கரன், பொருளாளர் வேணுகோபால் உள்ளிட்ட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

Tags:

#இன்றையசெய்திகள்உளுந்தூர்பேட்டை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #ulunderpettainewstodaytamil #ulunderpetflashnewstamil
Comments & Conversations - 0