Author: THE GREAT INDIA NEWS

Category:

அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே இடிந்துவிழுந்து வருவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் அச்சம் அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒருசில கிலோ மீட்டர் தொலைவில் அம்மையப்பன் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த பல மாதங்களாக பராமரிப்பு இன்றி இருந்துவந்தது. இதனால் இப்பள்ளியில் பல்வேறு வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையிலும், மேலும் பல வகுப்பறைகளின் மேற்கூரை கான்கீரிட் பூச்சு பெயர்ந்து விழந்து வருகிறது. இதுதவிர வகுப்பறைகளின் சுற்றுசுவர், பள்ளி காம்பவுண்ட், கழிப்பறைகள் என அனைத்தும் பழுதடைந்து காண்பதோடு, இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டிடத்தின் இத்தகைய அபாய நிலையினால் தற்போது பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அச்சம் அடைந்துள்ளதோடு, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:

Comments & Conversations - 0