Author: THE GREAT INDIA NEWS

Category:

புதுவை : புதுச்சேரி அரசின் தலைமைச் செயலராக அஸ்வினி குமார் டெல்லியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு புதுச்சேரியில் பணிக்கு அமர்த்தப்பட்டார். அப்போது துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இருந்த நிலையில் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தார். இதனால் தலைமைச் செயலரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் காங்கிரஸின் அரசுக்கு தடையாக இருப்பதாக பல கட்ட போராட்டங்களை அப்போதைய முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் அமைந்துள்ளது. இதில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு தமிழிசை சௌந்தர்ராஜன் கூடுதல் துணை நிலை ஆளுநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும் தலைமை செயலர் அஸ்வினி குமார் மாற்றப்படவில்லை. ஆனால் அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தலைமை செயலர் தடையாக இருப்பதாகவும், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பதாகும் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். மேலும் புதுச்சேரியின் சபாநாயகர் கூட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் மேலும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமை செயலரை மாற்ற வேண்டும் இதற்காக ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில்.... வருகிற 24-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார், இந்த நிலையில் புதுவையில் தலைமை செயலாளராக பணிபுரிந்து வந்த அஸ்வினி குமார் அதிரடியாக டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் அருணாச்சல பிரதேசத்தில் பணிபுரிந்த I.A.S அதிகாரி ராஜீவ் வர்மா புதுச்சேரியின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு அதற்கான உத்தரவை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் தலைமை செயலர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், தற்போது அமித்ஷா வர உள்ள நிலையில் புதுச்சேரியின் தலைமைச் செயலர் அஸ்வினி குமார் மாற்றப்பட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல். இன்றைய செய்திகள் புதுவை,இன்றைய முக்கிய செய்திகள் பாண்டிச்சேரி,இன்றைய செய்திகள் பாண்டிச்சேரி மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Pondichery news,Today tamil news,Latest Pomdichery news,District news

Tags:

Comments & Conversations - 0