• முகப்பு
  • மேகதாது அணை குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்?

மேகதாது அணை குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடையே பேசிய கர்நாடக முதலமைச்சர், மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்ளப்போவதாகவும் இதனை செயல்படுத்துவதற்கான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வோம் என்றும் கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவும், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக தெளிவுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended