- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சென்னை -கன்னியாகுமரி சாலை விரிவாக்கப் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அனைத்து கட்சியினர் குற்றச்சாட்டு.
சென்னை -கன்னியாகுமரி சாலை விரிவாக்கப் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அனைத்து கட்சியினர் குற்றச்சாட்டு.
குமரவேல்
UPDATED: Sep 27, 2023, 1:07:51 PM
சென்னை -கன்னியாகுமரி தொழிற்தட சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி கடலூர் சாவடி முதல் மடப்பட்டு வரை சுமார் 37கி.மீ.சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 1கி.மீ.சாலையை அகலப் படுத்தப்படாமலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் ஒரு சில தனிநபர்களுக்கு ஆதரவாக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல் படுவதாக சொல்லி நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
மேலும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் ஆனால் அதனால் எந்த வித பயனும் இல்லை.
நம்ம நெல்லிக்குப்பம் பொது நல கூட்டமைப்பினர்கள் சார்பில் இன்று காலை சுமார் 11மணியளவில் நெல்லிக்குப்பம் ஒத்தவாடி தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் அனைத்து கட்சிகள்,
பொது நல சங்கங்கள், கவுன்சிலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள்,கட்டிட தொழிலாளர் சங்கங்கள், ரசிகர் மன்றங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.
மதிமுக மு.மா.செ. ஜெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மா.செ.மாதவன் மற்றும் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீ ரங்கன் பிரகாஷ் கலந்து கொண்டனர்.
மா.கம்யூ.பகுதி குழு செயலாளர் ஜெயபாண்டியன், வரவேற்புரை ஏற்றார். விசிக நகர செயலாளர் திருமாறன் நன்றி தெறிவித்தார்.சமூக ஆர்வலர் குமரவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மேற்படி கூட்டத்தில் சாலை விரிவாக்கத் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 29.09.2023 அன்று காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.