• முகப்பு
  • விவசாயம்
  • 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து கீழ்வேளூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து கீழ்வேளூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செ.சீனிவாசன்

UPDATED: May 29, 2023, 1:23:08 PM

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கலைஞர் நகர் புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 37 பேரூராட்டசிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் முதல் முறையாக கடந்த ஆண்டு இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது. அதன்படி கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பயனடையும் வகையில் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் நகர்ப்புற 100 நாள் வேலைத்திட்டம் அனைத்து பேரூராட்சிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் வேலை இல்லாமல் இருந்து வருகின்றனர். இதைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கீழ்வேளூர் கடை வீதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் லாசர் தலைமையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பேரூராட்சி பகுதியில் வசிக்க கூடிய மக்கள் கலந்து கொண்டு தமிழக அரசு இத்திட்டதத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டும்,

நிறுத்தப்பட்ட நகர்புற 100 நாள் வேலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் கடை வீதியில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்று பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended