• முகப்பு
  • district
  • அல்ஹிக்மா பள்ளியின் தாளாளர் வேகத் தடுப்புகள் அன்பளிப்பு.!!

அல்ஹிக்மா பள்ளியின் தாளாளர் வேகத் தடுப்புகள் அன்பளிப்பு.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி பைப்பாஸ் சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டது பள்ளி, கல்லூரி, மாணவர் மற்றும் வாகன விபத்தில் பலர் மரணம் அடைந்தார்கள் உடனடியாக தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே அவர்களின் ஆலோசனையின் படி உத்தமபாளையம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் தலைமையில் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் க.சிலைமணி அவர்கள் அப்பகுதியில் உடனடியாக வேகத்தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. மற்றும் ஒளிரும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட அபாயம் வேகத்தை குறைத்து கவனமாக செல்லவும் என்று வசனம் எழுதிய பதாகைகள் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது உத்தமபாளையம் அல்ஹிக்மா பள்ளி தாளாளர் P.முகமத்சைபுல் நிர்வாக இயக்குநர். அவர்கள் ரூபாய் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் செலவில், ஹார்டுவேர் ஹமிதியா கிரில் ஒர்க்ஸ் ஹபீப் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அன்பளிப்பு செய்யப்பட்டது. அப்போது (பொறுப்பு) உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, போக்குவரத்து ஆய்வாளர் RTO சுந்தரராமன் மற்றும் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் க.சிலைமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலும் அன்பளிப்பு வழங்கிய பள்ளியின் தாளாளர் ஹிபாப் அவர்களை அதிகாரிகள் அனைவரும் பாராட்டினர். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

VIDEOS

RELATED NEWS

Recommended