Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொது மக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப் பட்டது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜ பக்‌ஷேவின் வீடும் எரிக்கப் பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன. இந்நிலையில் இலங்கையில் வன்முறை வெடித்து உள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப் பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப் படுத்துவதற்கு தமிழக காவல் துறை, இந்திய கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இலங்கை ஹம் பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில் அகதிகளோடு சேர்ந்து ஜிதேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை எச்சரித்து உள்ளது. சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும் படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigl #srilankakalavaram #srilankanews #indiangovernmentalert #srilankalatestnews #srilankabreakingnews #srilankanewstoday
Comments & Conversations - 0