புளியரையில் வரும் 24ம் தேதி கனிமவளங்கள் கேரளா செல்வதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

ராஜ்குமார்

UPDATED: May 16, 2023, 9:00:59 AM

சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் வழங்கினார்.

அப்போது அவர் புளியரையில் வரும் 24ம் தேதி கனிமவளங்கள் கேரளா செல்வதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

தென்காசி தெற்கு மாவட்டம், சுரண்டை நகர அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது :- 

தமிழகத்தில் தலை சிறந்த ஆட்சியை நடத்தியவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ‌‌பிறந்த குழந்தைக்கு பெட்டகம் முதல் மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், புத்தகங்கள், பெண்களுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம், கர்ப்பிணிகளுக்கு உதவி திட்டம், முதியோர் உதவித்தொகை என அனைத்தும் வழங்கினார்.

ஆனால் தற்போது அத்திட்டங்கள் குறைக்கப் பட்டு வருகிறது ‌‌லேப் டாப் வழங்கப்படவில்லை, மதுபானங்கள் ஏடிஎம் மூலம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு தமிழக வளங்கள் சூறையாடப்படுகிறது ஆகவே அதனை தடுக்க வரும் 24ம் தேதி புளியறையில் அதிமுக தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

சுரண்டை 27 வார்டு செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சுரண்டை நகர கழக செயலாளர் வி. கே.எஸ்.சக்திவேல் வரவேற்றார், முன்னாள் எம்பி கே.ஆர். பி.பிரபாகரன், தலைமை கழக பேச்சாளர்கள் தீக்கனல லட்சுமணன், பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்,ரோலிங் சேர், தையல் இயந்திரம், விவசாயிகள் பயன்படுத்தும் ஸ்பிரேயர், அயன் ஃபாக்ஸ், மண்வெட்டி,தென்னங்கன்று போன்ற பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து ஐநூறு பயனாளிகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் சுரண்டை நகர கழக செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சண்முகசுந்தரம் இணைச் செயலாளர் முத்துலட்சுமி, வீரபாண்டியன், சாமிநாதன், அமல்ராஜ், இருளப்பன், சிவசங்கர், ஜெயச்சந்திரன், கவுன்சிலர்கள் பொன் ராணி, வசந்தன், பவுன் ராஜ், ஆடிட்டர் முத்துராஜ் ,குத்தாலிங்கம் ,அருணா, இந்திரா அழகுதுரை, தேனம்மாள் தங்கராஜ் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சுரண்டை நகர அம்மா பேரவை செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended