• முகப்பு
  • அரசியல்
  • கோணமூலை ஊராட்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா சிறப்பு மருத்துவ முகாம்.

கோணமூலை ஊராட்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா சிறப்பு மருத்துவ முகாம்.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 14, 2023, 7:43:09 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்  பொது செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி  69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி கோணமூலை ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் கோணமூலை ஊராட்சி செயலாளர் காமு (எ) மணிகண்டசங்கர் சிறப்பு மருத்துவ முகாமினை ஏற்ப்பாடு செய்திருந்தார்.

இந்த முகாமில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பண்ணாரி கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல், இரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்து நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவராஜ், மாரப்பன், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended