• முகப்பு
  • ஆன்மீகம்
  • அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த தீமிதி திருவிழா கோலாகலம் நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த தீமிதி திருவிழா கோலாகலம் நடைபெற்றது.

சுரேஷ் பாபு

UPDATED: May 7, 2023, 7:03:12 PM

திருத்தணி அடுத்த தும்பிக்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்னி வசந்த தீமிதி திருவிழா கடந்த 28 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதமிருந்து அன்று முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் கரக ஊர்வலமும் சுவாமி ஊர்வலமும் கிராமத்தில் வீதி உலா வந்தது.

அப்போது பக்தர்கள் தங்கள் வீட்டு முன்பு வரும்போது சுவாமிக்கு கற்பூரம் ஆர்த்தி கொடுத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

நிறைவு நாளன்று கோவில் முன்புள்ள தீ குண்டத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்காக மாலை 6 மணிக்கு புனித நீராடி சந்தனம் பூசி குங்குமம் வைத்து மாலை அணிவித்துக் கொண்டு ஓம் சக்தி ஓம் சக்தி அரோகரா அரோகரா என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் இறங்கி கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு தங்கள் நேற்றி கடனை நிறைவேற்றி விரதத்தை நிறைவு செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended