மீண்டும் ரெப்போ வட்டி உயர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பண வீக்கத்தைக் கட்டுப் படுத்தும் வகையில், இந்தியரிசர்வ்வங்கி புதன் கிழமை ரெப்போவட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக அறிவித்தது. கச்சாஎண்ணெய் விலை மற்றும் பண வீக்கம்  அதிகரித்து வரும்சூழலில் ரிசர்வ்வங்கியின் நிதிக்கொள்கைக் குழுவின் மூன்றுநாள் கூட்டம் ஜூன் 6 ம்தேதி முதல் தொடங்கி முதல் 8 ம்தேதி வரை நடை பெறுகிறது. ரிசர்வ் வங்கியின் மூன்றுநாள் கூட்டத்தின் போதுஇந்திய ரிசர்வ்வங்கி தனது ரெப்போவிகிதத்தை மீண்டும் உயர்த்தலாமென பலமுதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில்,  பண வீக்கத்தைக்கட்டுப் படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ்வங்கி புதன் கிழமை ரெப்போவட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக அறிவித்தது. இந்த உயர்வுக்குப்பிறகு ரெப்போவிகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக அதிகரித்து உள்ளது. புதன் கிழமை நடைபெற்ற நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவு குறித்து ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இந்தத்தகவலை அளித்து உள்ளார். ஒரு மாதத்தில் இரண்டாவதுமுறையாக ரெப்போவிகிதம் உயர்த்தப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended