தேசிய நெடுஞ்சாலைகளில் குற்றங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமனம்!

வாசுதேவன்

UPDATED: May 10, 2023, 2:09:18 PM

வேலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், 5 நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் எண்ணிக்கையை 30 ஆக அதிகப்படுத்தி மும்முறை சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு விபத்து நேரத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக எவ்வாறு முதலுதவி வழங்க வேண்டும் என்பதை பற்றிய விரிவான செய்முறைகளை மருத்துவர் வி.பிரசன்ன குமார், உதவி காவல் கண்காணிப்பாளரால் (பயிற்சி) வழங்கப்பட்டது.

மேலும் விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் திடீர் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் தீயினை எவ்வாறு அணைப்பது மற்றும் தீக்காயம் அடைந்தவர்களை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றிய வகுப்பினை வேலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீயணைப்பு வீரர்கள் மூலம் மேற்படி நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவலர்களுக்கு அளிக்கப்பட்டது.

தீயணைப்பான்களை வைத்து துரிதமாக தீயினை எப்படி அணைப்பது என்பதை பற்றிய செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேலும் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் குற்றங்களை தடுப்பதில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவினரின் முக்கியத்துவம் குறித்தும், விபத்து நேரத்தில் பொதுமக்களின் உயிரையும், உடைமையையும் காப்பது குறித்த விரிவான அறிவுரைகளை வழங்கியும்,

காயம் பட்டவர்களை முதலுதவி செய்து மீட்பதற்கான ஸ்ட்ரெட்சர், நெக்ரெஸ்ட் போன்ற உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் வழங்கினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended