• முகப்பு
  • district
  • ஸ்ரீமுஷ்ணத்தில் கூடுதல் ஆட்சியர் பவன் குமார் திடீர் ஆய்வு , மேற்பார்வையாளரை வெளுத்து வாங்கிய கூடுதல் ஆட்சியர்!

ஸ்ரீமுஷ்ணத்தில் கூடுதல் ஆட்சியர் பவன் குமார் திடீர் ஆய்வு , மேற்பார்வையாளரை வெளுத்து வாங்கிய கூடுதல் ஆட்சியர்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் , கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி பிரி ஓபன் ஆர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் கர்மங்குடி , காவனூர் , ஸ்ரீ நெடுஞ்சேரி , ஸ்ரீ புத்தூர் , பழங்குடி ஆகிய பத்து ஊராட்சிகளிலும் பிரதமர் மந்திரி வீடு திட்டத்தின் கீழ் பல்வேறு வீடுகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், இதனால் பயனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பயனாளிகளுக்கு விரைவில் கல் , மணல் , சிமெண்ட் ஆகிய பொருட்களை விரைவில் வழங்கிடவும் அதோடு பயனாளிகளின் உரிய பணத்தை உடனே அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார். 2022 - 2023 காண அனைத்து கிராம மக்கள் கணக்கெடுப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் , அதோடு பணி மேற்பார்வையாளர் அவர்களது வேலையை சரிவர செய்வதில்லை எனவும் , இதனால் மக்கள் பிரச்சினைகள் வெளியே தெரிவதில்லை எனவும் , மேற்பார்வையாளர்கள் , ஊராட்சி செயலர்கள் சரிவர எங்களுக்கு கணக்கு காண்பிப்பதில்லை எனவும் மேற்பார்வையாளர்கலை குற்றம் சாட்டினார். நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக மேற்பார்வையாளர் கூறினார் . உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர் , விமலா உடன் இருந்தனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended