• முகப்பு
  • district
  • திருவாரூர் அருகே தூர்வாரும் பணியினை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் அருகே தூர்வாரும் பணியினை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம்,கூத்தாநல்லூர் வட்டம், ஓகைபேரையூர் மற்றும் கர்ணாவூர் கிராமம், பனையனார் வடிகால் வாய்க்கால்,அனுமன் கோட்டக வடிகால் வாய்க்கால், தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதையொட்டி சித்தனங்குடி ஊராட்சி, கர்ணாவூர் கிராமத்திற்குட்பட்ட பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் , கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் (நீர்வளத்துறை) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க இந்தாண்டு காவிரி டெல்டா பகுதியின் 10 மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்தி சுமார் 150 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் எதிர்வரும் மே-31க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை துர்வாரும் பணிகளை அந்தந்த பகுதியிலுள்ள உழவர் குழுக்களின் கண்காணிப்பு மற்றும் அவர்களின் ழுமு ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரானது அனைத்து கடைமடை பகுதிகளுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 115 பணிகள் எடுக்கப்பட்டு 1200.56 கி.மீ தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் இட ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இவ்ஆய்வில் முதன்மை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற் பொறியாளர் சீனிவாசன்,மற்றும் அரசு அலுவலர்கள், உழவர் குழுக்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news,Thiruvarur todays news tamil,Thiruvarur latest tamil news live,thiruvarur news live,Additional Chief Secretary Sandeep Saxena personally inspected the dredging work near Thiruvarur.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended