நாகை அருகே வலிவலத்தில் சுமார் 20 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு !!

செ.சீனிவாசன்

UPDATED: May 24, 2023, 9:10:50 AM

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் சுமார் 20 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரூ.2.65 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்ஊராட்சியில், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மழைக் காலங்களில் மழைநீர் வடிய வடிகால் வசதி இல்லாமல் இருந்தது.

இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் வடிய வழியின்றி, குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கும். எனவே, நிரந்தரமாக கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

அதன்பேரில், கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைக்க மாவட்ட கவுன்சிலர் செல்விவீரமணியின் நிதியில் இருந்து, வலிவலம் வடக்கு தெருவிலிருந்து தோப்படி சக்தி மகா காளியம்மன் கோவில் வரை சுமார் 55 மீட்டர் தூரத்திற்கு தற்போது ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கட்டுமான பணியை வலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் செ.மணிகண்டன், ஊராட்சி செயலர் டி.சரவணன் ஆகியோர் ன பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended