• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காட்டாவூரில் மின் கம்பங்கள் சாய்ந்து ஒரு மாத காலமாகியும் சரி செய்யப்படாததால் சுமார் 150 ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்பு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காட்டாவூரில் மின் கம்பங்கள் சாய்ந்து ஒரு மாத காலமாகியும் சரி செய்யப்படாததால் சுமார் 150 ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்பு.

L.குமார்

UPDATED: May 19, 2023, 7:43:50 PM

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராமத்தில் மூன்று போக விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென பெய்த காற்று மழையால் தோப்புக்கொள்ளை பகுதி அருகே விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்தன.

ஒரு மாத காலம் ஆகியும் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்படாமல் உள்ளது. இங்கு சுமார் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் குறுவை சாகுபடிக்கான விவசாயப் பணிகள் நடந்துவருகிறது.

நாற்றுகள் விடப்பட்டு நடவு செய்யும் நேரமான இந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் நிலங்களில் தண்ணீர் விட முடியாமலும் நடவுக்கு தயாரான நாற்றுகளை நிலங்களில் நட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் நடுவதற்கு தயாராக உள்ள நாற்றுகளும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து சேதமாகுபம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் 150 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே விழுந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended