• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் சலங்கை பூஜையில் ஆடி அசத்திய பரமக்குடி பள்ளி மாணவி லக்ஷீதாவிற்கு பாராட்டு மழை குவிந்த வண்ணமாய் உள்ளது.

மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் சலங்கை பூஜையில் ஆடி அசத்திய பரமக்குடி பள்ளி மாணவி லக்ஷீதாவிற்கு பாராட்டு மழை குவிந்த வண்ணமாய் உள்ளது.

மாமுஜெயக்குமார்

UPDATED: May 22, 2023, 12:45:17 PM

பள்ளி, கல்லூரி பயிலும் மாணவிகள் தங்களது குழந்தை பருவத்திலேயே கல்வி அறிவோடு பரதநாட்டியம், கராத்தே போன்று பல்வேறு விதமான கலைகளை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதை நாம் கண் கூடாக காணமுடியும்.

அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எஸ்.எம்.அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த பாலாஜி - மஞ்சுளா தம்பதியரின் செல்ல மகள் பா.லக்ஷிதா (11). இவர் பரமக்குடி அருகே உள்ள கவினா இண்டர்நேஷனல் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் கல்வி பயில்வதில் சிறந்தவராக திகழ்வதோடு பரதநாட்டிய கலையிலும் சிறந்தவராக உள்ளார்.

இந் நிலையில், மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் ஜதீஸ்வரா அகடாமி சார்பில் 2-ம் ஆண்டு சலங்கை பூஜை நடைபெற்றது. கலங்கை பூஜையில் பரமக்குடி பா. லக்ஷுதா கலந்து கொண்டு கலை நயத்தோடு ஆடி அசத்தினார்.

அகாடமி சார்பில் கேடயம் வழங்கி பாராட்டி சிறப்பித்தனர்.

சலங்கை பூஜையில் கலந்துகொண்டு அசத்திய பா.லக்ஷுதாவை அவரது இல்லத்தில் நமது சிறப்பு செய்தியாளர் குழு பிரத்யேகமாக சந்தித்த போது,

சுற்றிச் சுழலும் சூறாவளி போன்றும், சீறிப் பாய்ந்து வரும் அலைகள் போன்று தனது லட்சிய கனவுகளை மட... மடவென ... கூறியதாவது :

எனது சிறு வயது முதலே கல்வியோடு பரதநாட்டியம் கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. அதற்கு எனது பெற்றோர்களும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

எனது மூத்த சகோதரர் சென்னை லயோலா கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி.கணிதம் படித்து வரும் தீனதயாளனும் அவ்வவ்போது ஆலோசனைகள் கூறி உற்சாகப்படுத்தியது என்னை மேலும் சிறப்படையச் செய்தது.

நான் கடந்த 6 வருடமாக பரத நாட்டியத்தின் மூலம் சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த விழாவிலும், சிதம்பரம், மதுரை-பரமக்குடியில் பல்வேறு நிகழ்வுகளிலும் ஆடி கலை நயத்தை உணர்த்தியுள்ளேன்.

தற்போது மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த விழாவிலும் கலை நயத்தோடு ஆடியதால் அகடாமி சார்பில் கேடயம் வழங்கி சிறப்பித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கல்வியும், பரதநாட்டியமும் எனது இரு கண்கள் போன்றதென மகிழ்ச்சி பெருக்கோடு தெரிவித்தார்.

கலைநயத்தை பிரகாசித்து சாதனைகள் படைத்து வரும் இளம்மங்கை பா.லக்ஷீதாவிற்கு பள்ளியிலும், கல்வி துறையினர், குடும்பத்தினர்கள், அன்பர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் என பலரும் பாராட்டி மகிழ்ந்த வண்ணமாய் உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended