13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த பொம்மை வியாபாரி.

இடும்பன்

UPDATED: May 13, 2023, 11:46:43 AM

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 32 இவர் ஏற்கனவே திருமணமானவன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவரது மனைவி பிரிந்து வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது பாலமுருகன் ஊர் ஊராக சென்று திருவிழா கூட்டங்களில் பொம்மை விற்கும் தொழில் செய்து வந்தான்.

இவர் கடந்த ஆண்டு பண்ருட்டி அம்பேத்கர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி வியாபாரம் செய்து வந்தான்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தியுள்ளான்.

பின்னர் சிறுமி பழனிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது அதன் பிறகு சிறுமியை உளுந்தூர்பேட்டையில் விட்டுவிட்டு தலைமறைவானான்.

இது குறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து பொம்மை வியாபாரி பாலமுருகனை தேடி வந்தார்.

நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து குற்றவாளி கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அவரது உத்தரவுப்படி பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி குழு தனிப்படை போலீஸ், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையில் தேர்தல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு தனிப்படை போலீசார் ஆனந்த்,ராஜி கணேச மூர்த்தி ஆகியோருடன் தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று திருவிழா கூட்டங்களில் வலை வீசி தேடினேன்.

பாலமுருகனின் செல்போன் இந்தி வாலிபர் ஒருவரிடம் 800க்கு விற்றது தெரிய வந்தது வெறும் புகைப்பட ஆதாரத்துடன் சுற்றி வந்த தனிப்படை போலீசாருக்கு அவன் இருக்கும் இடம் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பாலமுருகனை சுற்றி வளைத்து கைது செய்த தனிப்படையினர் அவரை பண்ருட்டிக்கு அழைத்து வந்தனர் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான்.

6 மாத காலமாக கிடப்பில் கிடந்த சிறுமி பாலியல் குற்றவாளியை அதிரடியாக கைது செய்த பண்ருட்டி போலீசாருக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டுகளை தெரிவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended