தினம் ஒரு திருக்குறள் 27-09-2023

கணேசன்

UPDATED: Sep 26, 2023, 8:42:05 PM

திருக்குறள்

அறம் - இல்லறவியல் - இல்வாழ்க்கை

குறள் : 49

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

மணக்குடவர்  :

அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

மு.வரதராசனார்  :

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

மு.கருணாநிதி  :

பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா  :

அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

ஆங்கில மொழி பெயர்ப்பு :

The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim.

ஆங்கிலம்  :

The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.

VIDEOS

RELATED NEWS

Recommended