Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

திருவாரூர் : இஸ்லாமியர்களின் புனித 5  கடமைகளை உணர்த்தும் மாதம் ரம்ஜான். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாக வருகிறது. இந்த மாதத்தில் தான் திருக்குர்ஆன் - இறைவனிடமிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது இத்தகைய புனித மாதத்தில், இஸ்லாமியர்கள் நோண்பு வைத்து ஐந்து வேளை முழுமையாக தொழுகை நடத்தி ஆண்டவரை வழிபட்டு வருகின்றனர். இந்த மாதத்தின் முக்கிய திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி திருவாரூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது அதன் அதனடிப்படையில் திருவாரூரில் மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் இன்று காலை மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏராளமானோர் திரண்டு தொழுகை நடத்தினார்கள். இதில் மேட்டுப்பாளையம், உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து . இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.ஆண்கள் மற்றும் பெண்கள் தனியாக தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொழுகைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மாவட்ட தலைவர் முகமது பாசித் கூறுகையில்  இந்த ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு முன்பு பித்ரா எனும் தர்மத்தின் அடிப்படையில் திருவாரூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு 190 ஏழை எளிய குடும்பங்களுக்கு ரம்ஜானை கொண்டாடும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் செய்தியாளர் இலவரசன். இன்றைய செய்திகள் திருவாரூர்,இன்றைய முக்கிய செய்திகள் திருவாரூர்,இன்றைய செய்திகள் திருவாரூர்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,thiruvarur news today tamil,thiruvarur latest news tamil,thiruvarur flash news,A special Eid prayer was held on behalf of the Tamil Nadu Tawheed Jamaat in Thiruvarur on the eve of Ramadan

Tags:

Comments & Conversations - 0