எடப்பாடி கே பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை.
முத்தையா
UPDATED: May 12, 2023, 6:51:29 PM
தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் மின்சாரம் மதவிலக்கு துறை அமைச்சருமான பி தங்கமணி தலைமையில் சிறப்பு வழிபாடு அர்ச்சனை நடைபெற்றது.
எடப்பாடி கே பழனிசாமி நீடூழி வாழ்ந்து தமிழகத்தின் மக்கள் நலனில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் மீண்டும் தமிழக முதல்வராக வெற்றி பெற வேண்டும் என நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியை வணங்கி இந்த சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடத்தப்பட்டது.
நாமக்கல் நகர அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே பி பி பாஸ்கர் மற்றும் நாமக்கல் மாவட்ட அதிமுக பொருளாளர் பி காளியப்பன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் இந்த சிறப்பு அர்ச்சனையில் கலந்து கொண்டு முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியின் பிறந்தநாளில் இவர் நீடூழி வாழ வாழ்த்தி தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
இதில் ஏராளமான அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின் ஸ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர் சாமி கோவில் முன்புறம் பொது மக்களுக்கு எடப்பாடி கே பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதை அடுத்து நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகோயில் மண்டபத்தில் கூடியிருந்த பொது மக்களுக்கும் அதிமுகவினருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி பி பாஸ்கர் அதிமுக மாவட்ட பொருளாளர் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டனர்.
இதில் பெங்களூர் மற்றும் இதர வெளியூர்களில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.