• முகப்பு
  • விவசாயம்
  • விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம்.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம்.

JK 

UPDATED: May 27, 2023, 1:56:19 PM

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள மலர் சாலை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் அய்யாக்கண்ணு பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு இரட்டிப்பான லாபமான விலை தரப்படும் என கூறினார்.

ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாய் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும் இருபது ரூபாய் மட்டுமே வழங்குகிறார், கரும்புக்கு டன்னுக்கு 8100 ரூபாய் வழங்கப்படும் என கூறினார்.

ஆனால் தற்போது 2900 மட்டுமே வழங்குகிறார். லாபகரமான விலை வழங்க வலியுறுத்தி,  மேலும், கோதாவரி ஆற்று தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திருப்பி விடப்படும் என அமித்ஷா தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் ஜூலை 1ம் தேதி முதல் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும் தனியார் நடத்தக் கூடாது, வயல்களில் மின்சார வயர்களை அறுந்து விழுவதால் ஏற்படும் உயிரிழப்புக்கும் மற்றும் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கர்நாடகா மாநில அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு எந்த காரணத்தைக் கொண்டும் விடமாட்டோம் என தெரிவித்தார்.

பேட்டின் போது நிர்வாகிகள் மேகராஜன் உட்பட பல உடனிருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended