Author: THE GREAT INDIA NEWS

Category: district

காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் காவல் எல்லைக்குட்பட்ட அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிகின்றார். இவருக்கு இலக்கியா (20) , சக்திவேல் (18) , தனலஷ்மி ( 17) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் இலக்கியா தொலைதூர கல்வி முறையில் பிஏ வரலாறு படித்துக் கொண்டே வேலை செய்து வருகின்றார்.இவரது மகன் சக்திவேல் (17), மற்றும் இளைய மகள் தனலட்சுமி ஆகிய இருவரும் அவளுர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் "பன்னிரண்டாம் வகுப்பு" படித்துக் கொண்டு வருகின்றனர். இந் நிலையில் வெப்பச்சலனம் அதிகமாக இருந்த காரணத்தினால் சக்திவேல் தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். மிக மகிழ்ச்சியாக அனைவரும் சேர்ந்து கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். விடுமுறையில் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என சக்திவேல் மகிழ்ச்சியாக கூறி கொண்டே குளித்து கொண்டிருந்த நிலையில் உறவினர்கள் குளித்துவிட்டு கிணற்றிலிருந்து ஏறி தரைக்கு வந்து விட்டனர். படிக்கட்டில் அமர்ந்து இருந்த சக்திவேல் திடீரென காணாமல் போனதை அவருடைய உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை. சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு பிறகுதான் சக்திவேல் தங்களுடன் இல்லாததை கண்டு அதிர்ந்தனர். சக்திவேல் கிணற்றில் காணாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காஞ்சிபுரத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான குழுவினர் கிணற்றில் சிக்கி சடலமாக இருந்த சக்திவேலை 40 நிமிடமாக போராடி மீட்டு மாகரல் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மாகரல் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் டூ பள்ளி மாணவன் தேர்வு எழுதி வரும் நிலையில் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

Tags:

#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kanchipuramnewstodaytamil #Kanchipuramflashnewstamil
Comments & Conversations - 0