சாலைபாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்றது.

ராஜ்குமார்

UPDATED: May 23, 2023, 3:14:17 PM

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சாலைபாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றம் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ், தலைமையுரை ஆற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சாலைபாதுகாப்பு குறித்து கருத்துரை ஆற்றினார்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். பழனி நாடார்(தென்காசி), ஈ. ராஜா(சங்கரன்கோவில்), டாக்டர் தி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தலைமைப்பொறியாளர் (நெ), கட்டுமானம் (ம) பராமரிப்பு ஆர்.சந்திரசேகர் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் லோண்மை துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெரிவித்ததாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பிற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். சாலை சரியாக இருந்தாலும் பாதுகாப்பு விதி முறைகளை நாம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் குற்றாலா சீசன் மற்றும் திருவிழா காலங்களில் அதிகளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது அதனை தவிர்க்க சுற்றுச்சாலை அமைக்கப்பட வேண்டும். சாலைபாதுகாப்பை முக்கிய பணியாக என தெரிவித்தார். கருதி செயல்பட வேண்டும். சாலை பாதுகாப்பு நமது பொறுப்பு.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாலைபாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுவாத் தலமான குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகைத் தருவதால் சாலைபாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கள் பல்வேறு காரணங்களால் நடைப்பெறுகிறது.

அதிக வேகம், கவனக் குறைவு, சாலை ஆக்கிரமிப்பு அதிக பாரம் சுமந்து செல்லுதல், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமை, கைபேசி உபயோகித்தல், தவறான பாதையில் செல்லுதல், சுற்றி திரியும் கால் நடைகள் உள்ளிட்ட காரணங்களால் விபத்து ஏற்படுகிறது.

சாலை விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலைகளில் விபத்துகளை தடுக்க தரமான சாலைபாதுகாப்பு குறியீடுகள் அமைக்கப்பட வேண்டும். வேசுத் தடைகளில் சரியாக வர்ணம் பூசப்பட வேண்டும்.

பழுநடைந்த சாலைகள் உடனுக்குடார் சீரமைக்கப்பட வேண்டும், ஒப்பந்த தாரர்கள் முறையாக தரமாக பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

பாலங்கள் அமைத்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளும் போது ஒளிரும் வழியடைப்பு மற்றும் ஒளிரும் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அரசு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பள்ளி கல்லுாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சாலைபாதுகாப்பு குழு உறுப்பினர்கள், ஓட்டுநர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் தங்களது மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended