அரசுக்கு ஓர் வேண்டுகோள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரசுக்கு ஓர் ஆலோசனை. ஒரு ஜே.சி.பி மிஷினின் விலை 30 லட்சம்.... 40 மிஷின்களின் விலை 12 கோடி ரூபாய். அதில் ஒரு மிஷினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம் 20 ஆயிரம். ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலைசெய்ய இரண்டு பேர் வீதம் 40 மெசினுக்கு 16 லட்சம். மாதத்திற்கு.. டீசல்விலை மாதம் 10 லட்சம் தோரயமாக. ஆக மொத்தம் மாதம் 26 லட்சம். இதைவைத்து பத்து நாட்களில் ஒரு மாவட்டத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை சுத்தம் செய்து விடலாம். 32 மாவட்டங்களில் ஒருவருடத்தில் அனைத்தையுமே சுத்தம் செய்துவிடலாம். ஆகவருட செலவு 3.5 கோடி. மிஷின்களின் செலவுடன் சேர்த்து 16 கோடி. இதே கணக்கின் படி ஒரு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களையும் தூர்வார 16 கோடி தான் செலவு. ஆக மொத்தமாக ஒரு வருடத்திற்கு 50 கோடி ஒதுக்கி, அதை சரியாக கண்காணித்து... இந்த வேலையை செய்தால் அடுத்த வருடத்திற்கான நீரைத்தேக்கி வைக்கலாம். விவசாயத்தையும் செழிக்கவைக்கலாம். இப்படி செய்தாலே மக்களிடம் நல்லபெயர் வாங்கி விடலாம். இதை விடுத்து அரசியல்வாதிகள் ஏன் ஒரு தேர்தலுக்கு இவ்வளவு கோடிசெலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு இலவசம் கொடுக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. எதற்காக முந்நூறுகோடியில் சினிமா எடுக்கிறார்கள் என்பது புரியவில்லை. இதை அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டும். நம்மில் கூட ஓரிருவர் தவிர பேசுவதும் இல்லை. இதற்கான காரியங்களில் முயல்வதும் இல்லை. தேவைகளை பற்றிய தெளிவுகள் தெரிந்து பேச ஆரம்பிப்போம். அருமையான இந்த செய்தியை அவரவர் பல குழுவிற்கு பகிர்ந்து பலரையும் சென்றடைய செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கும். அனுபவஸ்தன்

VIDEOS

RELATED NEWS

Recommended