Author: செ.சீனிவாசன்

Category: மாவட்டச் செய்தி

நாகை துறைமுகத்தில் இந்திய கடற்படை முகாம் உள்ளது. இலங்கை உள்நாட்டு போர் நடைபெற்ற பொழுது விடுதலைபுலிகள் அமைப்புக்கு பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக இந்த முகாம் அமைக்கப்பட்டது.

இதில் ஒரு கமாண்டர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த முகாமில் பாதுகாப்பு பணிக்கு சுழற்சி முறையில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் கே வி குப்பம்பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் ராஜேஷ் 28 இன்று அதிகாலை இன்சாஸ் ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த துப்பாக்கியில் 20 தோட்டாக்கள் இருக்கும், அப்போது அதிகாலை 03:45 மணி அளவில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து கடற்படை முகாமில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது ராஜேஷ் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடற்படை வீரர்கள் அருகில் சென்று பார்த்த பொழுது ராஜேஷ் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து நாகை நகர காவல் நிலையத்திற்கு கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி ஆய்வாளர் சுப்ரியா ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக உடலை மருத்துவமனை கொண்டு செல்லாமல் கடற்படை முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்ட கடற்படை வீரர் ராஜேஷுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று ஏழு மாத பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. கடற்படை முகாமில் தமிழக வீரர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

#nagainews , #nagainewsintamil , #suicide #nagapattinamnewslive , #nagainewstoday , #nagapattinamnewstodaytamil , #nagapattinamnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #nagapattinamtodaynews , #nagailatestnews , #Nagapattinamnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0