• முகப்பு
  • அரசியல்
  • கும்மிடிப்பூண்டியில் கமுக்கமாக நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம். மாற்றுத் தேதி அறிவிக்க கோரிக்கை.

கும்மிடிப்பூண்டியில் கமுக்கமாக நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம். மாற்றுத் தேதி அறிவிக்க கோரிக்கை.

மகேஷ் குமார்

UPDATED: May 9, 2023, 7:18:23 PM

கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்காக ஊழியர்களை வைத்து நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டம், கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாததால் பொதுமக்கள் அதிருப்தி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன,

இந்த நிலையில் சித்தராஜ் பண்டிகை பகுதியில் உள்ள டான் ப்ளாக் பிரேக்ஸ் என்ற தனியார் தொழிற்சாலையில் விரிவாக்க திட்டத்திற்கான, கருத்து கேட்பு கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இதுகுறித்து முறையான அறிவிப்பு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாமல் கமுக்கமாக கூட்டம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு கரும்புகையாலும், ரசாயன கழிவுகளால் சுற்றுச்சூழல் அப்பகுதியில் பெருமளவில் மாசடைந்துள்ளது இதனால் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்றால் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்வார்கள் என்பதால்,

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை வைத்து கருத்து கேட்பு கூட்டம் கண் துடிப்புக்காக நடத்தப்பட்டதாக தாமதமாக தகவல் அறிந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். 

எனவே முறைப்படி பொது மக்களுக்கு தகவல் தெரிவித்து மாற்று தேதியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ஏற்கனவே தனியார் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கமுக்கமாக நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended