Author: THE GREAT INDIA NEWS

Category: district

கும்பகோணம் அருகே, மலையப்பநல்லூரில் உலகின் முதன்முதலாக இயற்கை விவசாயம் பாரம்பரிய நெல்லுக்கு மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வயல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நெல் வயலில் நடவு செய்யப்பட்டுள்ள, உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவ நடவு வயலை இயற்கை விவசாயி இளங்கோவன் என்பவர் நேபால் மாநிலத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகத்தினாலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தினாலும், நீளம் 50 அடியும், அகலம் 45 அடியும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் நடவு செய்துள்ளார். இதனை கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் நிலையிலான முழு உருவத்தை காட்டுகிறது என்பது சிறப்பம்சம். தகவலயறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயி இளங்கோவுக்கு சால்வை அறிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் மலையப்பநல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, மலையப்பநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து இயற்கை விவசாயி இளங்கோவன் கூறுகையில், நான் இயற்கை விவசாயத்தை கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக தொடர்ந்து செய்து வந்தேன். அதுபோல இந்த வருடம் 2000 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவர், அவர் இயற்றிய மொத்த குறள்களில் 11 குறள்கள் இயற்கை விவசாயம் பற்றி எழுதி உள்ளார். அதன் தாக்கமாக அதே இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில், திருவள்ளுவரின் உருவத்தை வயலில் நடவு செய்ய கடந்த வருடம் முதல் நினைத்து வந்தேன். அதனை தொடர்ந்து இதனை கடந்த 5 நாட்களாக நான் தனி ஆளாக நின்று நட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நட உள்ளேன் என்று தெரிவித்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#kumbakonamnews #kumbakonamnewsintamil #kumbakonamnewslive #kumbakonamnewstoday #kumbakonamnewstodaytamil #kumbakonamnewspapertoday #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalkumbakonamtamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0