Author: THE GREAT INDIA NEWS

Category: other

தேசிய மருத்துவர் தினம் என்பது மருத்துவர்களின் பங்கு மற்றும் சேவை செய்வதில் உள்ள பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிடவும், அவர்களின் செயல்பாடுகளையும், கடமைகளையும் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆயுஷ் மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர் மரு.செந்தில்குமார் அவர்களுக்கும் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் மரு. ஜெ.ராஜேஸ் அவர்களுக்கும் சேவையினை பாராட்டி தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களால் பாராட்டி வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி அவர்கள் மருத்துவர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் .சரவணன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அர்ஜூனன், என்.ஹெச்.எம். ஒருங்கினைப்பாளர் மரு. அன்பரசு, மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

Tags:

#doctorsday #worlddoctorsday #doctors #pradhanmantriawasyojana #ayushmanbharat #janarogya #janarogyayojana #bengalchiefminister #internationaldoctorsday #perambalurnewstamiltoday #perambalurnewspapertamil #perambalurnewstodaytamil #இன்றையசெய்திகள்பெரம்பலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #perambalurtodaynews #perambalurlatestnews #perambalurnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle
Comments & Conversations - 0