• முகப்பு
  • அரசியல்
  • கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் பகுதியில் 24 மணி நேர அவசர மருத்துவ சென்டரை அமைத்து தரக்கோரி பாமக சார்பில் கோரிக்கை மனு.

கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் பகுதியில் 24 மணி நேர அவசர மருத்துவ சென்டரை அமைத்து தரக்கோரி பாமக சார்பில் கோரிக்கை மனு.

சுரேஷ் பாபு

UPDATED: May 9, 2023, 2:15:12 PM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் பகுதியில் 24 மணி நேர அவசர மருத்துவமனையை அமைத்து தரக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் கோ ரவிராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன் அவர்களிடம் பொது மக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏளாவூர் சுற்றுவட்டார 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீனவர்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு மருத்துவ உதவி என்றால் எளாவூர் அருகில் உள்ள ஆந்திரா, தமிழ்நாடு எல்லைக்கு அருகே நவீன டோல்கேட் நிலையம் உள்ளது.அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேர அவசர மருத்துவமனையை தான் அவசர முதலுதவி பெற்று வருகிறோம்.

இந்த அவசர மருத்துவ முகாம் இல்லை என்றால் எங்கள் கிராமப்புற மக்களுக்கு பாம்பு கடித்தலோ அல்லது சாலை விபத்து, உடல் சார்ந்த மருத்துவ அவசர உதவிக்கு 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொன்னேரி மருத்துவமனைக்கும் அல்லது 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டி உள்ளது இதனால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.

எனவே 24 மணி நேர அவசர மருத்துவ சென்டரை ஏளாவூர் பகுதியில் நடைமுறைப்படுத்தவும், மேலும் தற்பொழுதுள்ள 24 மணி நேர அவசர மருத்துவ சென்டரை மேம்படுத்தி தர வேண்டும் என்று அந்த மனுவில் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து சென்றனர். இதில் ஒன்றிய செயலாளர் கேசவன், துணை தலைவர் கே.வெங்கடேசன், ஒன்றிய கவூன்சிலர் சீனிவாசன், ஆண்டியப்பன், மாரிமுத்து, வின்சட் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended