• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காஞ்சிபுரம் அருகே 17 வருடங்களுக்கு முன்பு அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் குளிக்க  20 வயது மதிக்கத்தக்க இளைஞர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் அருகே 17 வருடங்களுக்கு முன்பு அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் குளிக்க  20 வயது மதிக்கத்தக்க இளைஞர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லட்சுமி காந்த்

UPDATED: May 8, 2023, 6:46:12 PM

காஞ்சிபுரம் மாநகராட்சி நாகலூத்து மேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ரிக்க்ஷா ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். இவருக்கு உதயா வயது 22 , சூர்யா (வயது 20) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இளைய மகன் சூர்யா தன்னுடைய சக நண்பர்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் என ஒன்பது பேருடன் காஞ்சிபுரம் மாவட்டம் ஆற்ப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசால் கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர்.

சூர்யாவுக்கு குளிக்க தெரியாததால் கல்குவாரி குட்டை அருகே ஒதுங்கி நின்றிருந்த நிலையில் , நண்பர்கள் குளிப்பதை கண்டு தானும் குளிக்க வேண்டும் என நீரில் இறங்கினார்.

நீரில் இறங்கிய சில நிமிடங்களிலேயே சூர்யாவை காணவில்லை.நண்பர்கள் அலறி அடித்துக் கொண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட உதவி அலுவலர் சங்கர் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ஆர்.ஜெகதீசன் மற்றும் சக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரமாக போராடி சூர்யாவின் உடலை மீட்டனர்.

சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான உறவினர்களும் ஆற்ப்பாக்கம் கிராம மக்களும் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு கூடியது.

சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாநகரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள்.

ஏற்கனவே இந்த கல் குவாரி குட்டையில் இரண்டு அல்லது மூன்று நபர்கள் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உடனடியாக இந்த கல்குவாரியை பாதுகாப்பு வளையத்துக்குள் எடுத்து வர வேண்டும், இல்லாவிடில் ஆடு மாடுகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு போல் ஆண் பெண் என அனைவருக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு என அப்பகுதி இளைஞர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended