• முகப்பு
  • மருத்துவம்
  • சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்நாள் முடிந்துவிடும் என வாழ்ந்து வந்த 15 வயது சிறுவனுக்கு இலவசமாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து நடக்க வைத்து சாதனை.

சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்நாள் முடிந்துவிடும் என வாழ்ந்து வந்த 15 வயது சிறுவனுக்கு இலவசமாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து நடக்க வைத்து சாதனை.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 19, 2023, 2:16:53 PM

தஞ்சையை சேர்ந்த 15 வயது சிறுவன் கை.கால் பலவீனம் அடைந்து, கால் தசைகளில் விறைப்புத்தன்மை பிரச்சனை காரணமாக நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். 

ஆரோக்கியமாக எல்லோர் போல, ஓடி ஆடி விளையாடி வந்த சிறுவன் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பிறர் உதவியை நாடும் நிலையில் இருந்த சிறுவன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காண்பிக்கப்பட்டான்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் அரியவகை நோயான கைபோஸ்கோலியோசிஸ் என கண்டறிந்தனர். மிகவும் ஏழ்மையான குடும்பம் என அறிந்து இலவசமாக முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்தனர். 3 வாரங்களில் பிறரை போல சாதாரணமாக நடக்க ஆரம்பித்துள்ளான்.

சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கை முடிந்துவிடும் என வாழ்ந்த சிறுவனை மீட்டு நடக்க வைத்த மீனாட்சி மருத்துவமனை டாக்டர்களுக்கு சிறுவனும், அவரது உறவினர்களும் கள்ளிர் மல்க நன்றி தெரிவித்து கொள்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended