• முகப்பு
  • கல்வி
  • பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி ! காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தகவல்!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி ! காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தகவல்!

வாசுதேவன்

UPDATED: May 8, 2023, 2:37:02 PM

காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை சார்பாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.82 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்டக் கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 - 23 கல்வியாண்டில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில், 6,429 மாணவர்களும், 6,712 மாணவிகளும் என மொத்தம் 13,141 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். 

இதில், பொதுப் பாடத் பிரிவில் 12,661 மாணவ, மாணவிகளும், தொழில் சம்பந்தமான பாடப் பிரிவில் 480 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்தம் 13,141 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில், 11,935 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சியின் சராசரியாக 90.82 சதவீதமாகும். இதில் மாணவர்கள் 86.50 சதவீதமும், மாணவிகள் 94.96 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகள், மாணவர்களை விட 8.46 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி 86.46 சதவீதமாகும். இது மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 31வது தர வரிசையினை பெற்றுள்ளது. என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended