Author: THE GREAT INDIA NEWS

Category: district

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் அவளூர் ஊராட்சி அடுத்த நெய் குப்பம் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நெய்குப்பம் ஏரியில் கட்டி உள்ள கலங்கள் சேதம் அடைந்து உள்ளதால் ஏரியில் உள்ள தண்ணீர் மற்றும் மழைநீர் கசிந்து அங்குள்ள சுமார் 16 அடி அகல கால்வாயில் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று அங்கம்பாக்கம் மடுவில் சேருகின்றது. குடியிருப்புகள் மத்தியில் செல்லும் இந்த 16 அடி அகல கால்வாயில் தூர் வாராததால் ஏராளமான குப்பைகளும், கழிவுநீரும் சேர்ந்து சுகாதாரக் கேடு ஏற்படுத்துகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அவ்வப்போது உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு அவளூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெறுகின்ற அவல நிலை தொடர்கின்றது. மேலும் பெருமழை பெய்யும் போது கால்வாயில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்கு உள்ளே போகின்றது என வேதனையுடன் தெரிவித்தனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த கால்வாயில் தூர் வார பலமுறை திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பாபு விடம் கூறியும் இந்த பிரச்சினையை பொருட்படுத்தாமல் தானுண்டு, கமிஷன் உண்டு என்ற தொனியில் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தலா 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் , அருகருகே உள்ள நெய்குப்பம் மற்றும் அங்கம்பாக்கம் கிராமத்தில் தேவையே இல்லாத இடத்தில், தரமற்ற பொருட்களைக் கொண்டு இரண்டு ஓடை கால்வாய்களை திமுகவினர் கட்டியுள்ளனர். இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. சுமார் 8 லட்ச ரூபாய் பணத்தையும் கபளீகரம் செய்துவிட்டனர் என அப்பகுதி மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக இந்த கால்வாயில் தூர்வாரி, ஏரிகரையில் சேதம் அடைந்துள்ள கலங்கல்களை சீரமைக்க வேண்டும். மேலும் தேவையில்லாத இரண்டு இடத்தில் ஓடை கால்வாய் கட்டி, பணம் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்

Tags:

#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் #DMK #dmkstalin #stalin #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalkanchipuramtamilnadu #indrayaseithigalkanchipuram #todaynewskanchipuramtamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kanchipuramtodaynews #kanchipuramlatestnews #kanchipuramnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle
Comments & Conversations - 0