• முகப்பு
  • tamilnadu
  • பெண்வயிற்றில் இருந்த 6கிலோ புற்று நோய் கட்டி அறுவை சிகிச்சைமூலம் அகற்றப் பட்டது.

பெண்வயிற்றில் இருந்த 6கிலோ புற்று நோய் கட்டி அறுவை சிகிச்சைமூலம் அகற்றப் பட்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பெண்வயிற்றில் இருந்த 6கிலோ புற்று நோய் கட்டி அறுவை சிகிச்சைமூலம் அகற்றப் பட்டதாக டீன் செல்வி கூறினார். இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் செல்வி கூறியதாவது. அணைக் கட்டு அடுத்த இறையூர்கிராமத்தை சேர்ந்த சந்திரன். இவரது மனைவி அவராஞ்சி (வயது55). இவர் உடல் நலகுறைவின் காரணமாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அறுவைசிகிச்சை புற நோயாளிகள் பிரிவுக்கு வந்தார். அவருக்கு வயிறுவீக்கம், வாந்தி, பசி யின்மை மற்றும் உடல் எடை குறைவு ஆகிய உபாதைகள் மூன்று மாதங்களாக இருந்து வந்து உள்ளது. அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டு ரத்தபரிசோதனை, எக்கோ, சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் காப்பீட்டுதிட்டத்தின் கீழ் செய்யப் பட்டு அவருக்கு ரெட்ரோ பெரிடோனியல் லைபோ சார்கோமா எனப்படும் மிகப் பெரிய புற்று நோய் கட்டி உள்ளது. என்பதையும் சிறு நீரகம், சிறுநீர்குழாய், வயிற்றுப் புற மகாதமனி மற்றும் பிற ரத்தகுழாயை சூழ்ந்து உள்ளது. என்பதையும் கண்டறிந்தனர். மருத்துவ குழுவினர் அவராஞ்சிக்கு எட்டு மணிநேர தொடர்அறுவை சிகிச்சைக்கு பின்னர் 6 கிலோ எடை உள்ள புற்று நோய் கட்டி முழுமையாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரண்டு நாட்கள் செயற்கை சுவாசத்தில் தீவிரசிகிச்சை பிரிவில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்னர் சுவாசப்பயிற்சி ஆரம்பித்து, மஞ்சள்ரத்தம், சிகப்புரத்தம் ஏற்றி முழுமையாக குணமடைய செய்தனர். பல லட்சம் ருபாய் செலவாகக் கூடிய இந்த அறுவைசிகிச்சையை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவசமாக செய்யப் பட்டது. அறுவை சிகிச்சை செய்தமருத்துவ குழுவினருக்கு அவராஞ்சி குடும்பத்தினர் நன்றி கூறினர். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended