• முகப்பு
  • district
  • திருவண்ணாமலையில் முக கவசம் அணியாவிட்டால் 500 அபராதம்

திருவண்ணாமலையில் முக கவசம் அணியாவிட்டால் 500 அபராதம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். இத்துடன் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு தலா ரூபாய் 500 வீதம் அபராதம் விதிக்கப்படும். அரசு , தனியார் அலுவலகங்களில் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளி,கல்லூரிகளில் மாணவர்கள் ,ஆசிரியர்கள், முகக்கவசம் அணிந்து வருவதை அவற்றின் நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துநர் ஓட்டுநர் கண்காணிக்க வேண்டும். அனைத்து வியாபார மையங்களிலும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து கடைக்கு வர அறிவுறுத்த வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வருவதை கோயில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் பொது மக்கள் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார். இன்றைய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய முக்கிய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய செய்திகள் திருவண்ணாமலை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,Thiruvannamalai news tamil,Thiruvannamalai news,Thiruvannamalai news in tamil today,Tiruvannamalai news today in tamil,mask,corona,500 fine for not wearing face shield in Thiruvannamalai District

VIDEOS

RELATED NEWS

Recommended