• முகப்பு
  • விவசாயம்
  • நாகை அருகே திடிர் என பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் விவசாயிகள் வேதனை  

நாகை அருகே திடிர் என பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் விவசாயிகள் வேதனை  

செ.சீனிவாசன்

UPDATED: Sep 27, 2023, 9:30:28 AM

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது.

மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும் டிராக்டர் கொண்டு அழித்தனர் இதனால் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.

எஞ்சிய பயிர்களை பல தூரங்களில் இருந்து எஞ்சின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து குறுவை பயிர்களை காப்பாற்றினர் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி,கடலாகுடி, திருபஞ்சனம், பிச்சமங்கம், அணக்குடி, கிள்ளுக்குடி அய்யடிமங்கலம்,

காரிய மங்கலம் மோகலூர் , செண்பகபுரம்,பரப்பனூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் 90 நாட்கள் ஆகிய பயிர்கள் இன்னும் 10, தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் இடியுடன் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. 

மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் திடீரென பெய்த கனமழையால் சேதமடைந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended