• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கிராமப்புற சாலைகளை மேம்படுத்தி நகர்ப்புற சாலைகளில் இணைக்கும் வகையில் தமிழக அரசு ரூபாய் 4,000 கோடி ஒதுக்கீடு - ஜ.பெரியசாமி

கிராமப்புற சாலைகளை மேம்படுத்தி நகர்ப்புற சாலைகளில் இணைக்கும் வகையில் தமிழக அரசு ரூபாய் 4,000 கோடி ஒதுக்கீடு - ஜ.பெரியசாமி

செ.சீனிவாசன்

UPDATED: May 17, 2023, 10:10:00 AM

நாகை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் வருகை புரிந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமிக்கு குழப்பாடு கடை தெருவில் நாகை மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூபாய் 1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டும் பணி குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக திருக்குவளையில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை திறந்து வைத்து 104 பயனாளர்களுக்கு ரூபாய் 20 லட்சத்து 76 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜ.பெரியசாமி.

தமிழகத்தில் கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராமப்புற சாலைகளை மேம்படுத்தி நகர்ப்புற சாலைகளில் இணைக்கும் வகையில் தமிழக அரசு ரூபாய் 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கும், முரசொலி மாறன்,முத்துவேலர் அஞ்சுகம் அம்மையாரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவர் கெளதமன், தட்கோ தலைவர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended