• முகப்பு
  • crime
  • வாலாஜாபாத் காவல் நிலையம் அருகே ஒரே தெருவில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் கொள்ளை சமீப காலமாக குற்ற செயல்கள் அதிகரிப்பால் மக்கள் அச்சம்.

வாலாஜாபாத் காவல் நிலையம் அருகே ஒரே தெருவில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் கொள்ளை சமீப காலமாக குற்ற செயல்கள் அதிகரிப்பால் மக்கள் அச்சம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவர் கைத்தறி லுங்கி வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அருகே உள்ள பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மனைவியுடன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் . சுமார் 12 மணி அளவில் வீடு வந்து பார்த்த பொழுது முன்கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு பூஜை அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், நெக்லஸ், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க நகை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.. வாலாஜாபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் கைரேகை நிபுணர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதேபோல் இன்று காலையில் பொன்னியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்க்கு வந்திருந்த ஒரு பெண்ணிடம் இருந்து இரண்டு சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இன்று கொள்ளை போன சம்பத்து வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளி தணிகை அரசு என்பவர் வீட்டில் இருந்து ஏழரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் 3 லட்சம் ரொக்க பணமும் பீரோவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . தணிகைஅரசின் குடும்பத்தினர் தங்களது உறவினரின் திருமணத்திற்காக சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது . தணிகை அரசின் மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் மற்றும் நகை கடன் வாங்கி வைத்திருந்த நேரத்தில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை போனது தணிகை அரசின் மகளின் கல்லூரி படிப்பு கேள்விக்குறியாக உள்ளது . அதேபோல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே மது அருந்த சென்ற டீக்கடை உரிமையார் பாலமுருகன் என்பவரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி 80 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனமும், 17,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போனும் வழிப்பறி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாலாஜாபாத் நகரை சுற்றி பல தொழிற்சாலைகள் உள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக இந்தப் பகுதியில் கொலை ,கொள்ளை ,திருட்டு ,வழிப்பறி ,அடிதடி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. எனவே காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் மேற்கண்ட சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு சில காவல்துறையினர் சமூக விரோதிகளிடம் இருந்து கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு துணை போவதால் தான் மணல் கடத்தல், கள்ள சந்தையில் மதுபான விற்பனை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended