Author: THE GREAT INDIA NEWS

Category:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை 1998ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 2000-ஆம் ஆண்டில் தொடங்கி தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே மூன்று பிரிவுகள் உள்ளன இதில் கூடுதலாக புதியதாக 500 கோடி மதிப்பீட்டில் மூன்று புதிய பிரிவுகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட தேர்வுகள் மூலம் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கண்ணாடித் தொழிற்சாலை உலகின் முதலாவது மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வளாகமாக உள்ளது. இதில் 10,000 சதுர மீட்டர் பரப்பில் கொண்டது. 75 நாடுகளில் உள்ள செயின்ட் கோபின் தொழிற்சாலையில் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முதன்மை செயலாளர் கண்ணன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா ஆர்த்தி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னிர்செல்வம் பெரும்புதூர் மட்டசட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை தொழிற்சாலையின் தலைமை செயல் அதிகாரி பெனோயிட் பாஸின், பி.சந்தானம் மற்றும் தொழிற்சாலையின் தலைமை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் தொலைநோக்கு இலக்கான ஒரு டிரில்லியன் டாலர்களாக நிலைக்கு பசுமை தமிழகம் உருவாக்கத்தை உருவாக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதாக தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள புளோட் கிளாஸ் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் பசுமை பூங்கா உள்ளிட்ட 3திட்டங்களை செயின்ட்-கோபைன் சர்வதேச இந்திய வளாகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 500-கோடி மதிப்பில் துவக்கப்படும் இந்த திட்டத்தில் கூடுதலாக 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசின் தொலைநோக்கு இலக்கான 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் லட்சியத்தை எட்டும் விதமாக இன்று தொடங்கப்பட உள்ளது. 1998 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு முதல் இந்த தொழிற்சாலை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது புளோட் கிளாஸ் ஆலை இந்த புளோட் கிளாஸ் உற்பத்தி பிரிவானது அதிகபட்ச உற்பத்தி நவீன தொழில்நுட்ப வடிவமைப்பு, உள்ளிட்ட சிறப்புத் தன்மைகளை உள்ளடக்கிய இலகுரக தரமான கண்ணாடிகளை உருவாக்கும் வகையில் இப்பிரிவு செயல்பட உள்ளது. நவீன கட்டமைப்பை ஏற்ற கண்ணாடிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறை கண்ணாடிகள் மற்றும் சூரிய மின் உற்பத்திக்கான கண்ணாடிகளை தயாரிக்கிறது. ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு இதில் பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ஜன்னல்களை 2022க்குள் உற்பத்தி செய்யும் இலக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறையில் செயல்படும் பிரிவு ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவானது தமிழக அரசின் வீட்டுவசதி உருவாக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான தயாரிப்பை அளிக்கிறது. செயின்ட் கோபைன் சிப்காட் நகர்புறவனம் தமிழக அரசின் பசுமை தமிழக இலக்கை எட்டும் வகையில் செயின்ட் கோபைன் சிப்காட் வளாகத்தில் நகர்ப்புற வனம் உருவாக்கும் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags:

Comments & Conversations - 0