Author: முத்தையா

Category: மாவட்டச் செய்தி

வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிக்கல்வி நிறுவனங்கள் செயல்பட துவங்க உள்ளதை அடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 31பள்ளிக்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 397 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட உள்ளன.

இதில் இன்று 253 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் குறைபாடு உள்ள 23 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன இந்த வாகனங்கள் ஒரு வாரத்திற்குள் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய விட்டால் அந்த வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது என வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அரசின் விதிகளுக்கு உட்பட்டு வண்டி இருக்கைகள் படிக்கட்டுகள் அவசரகால வழி முதல் உதவி பெட்டி தீயணைப்பு கருவிகள் வேகக் கட்டுப்பாட்டு கருவி கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட 21 அம்சங்கள் பள்ளிக்கல்வி வாகனங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி வழங்கும் விதமாக தீயணைப்பு கருவிகளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் விளக்கிக் கூறினார் ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மோட்டார் வாகன ஆய்வாளர் பாம பிரியா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0